Breaking News

உலகின் மிகப்பெரிய 24000 டி.யி.யூ.(TEU) வரை ஏற்றிசெல்லும் திறன் கூடிய இரட்டை எரிப்பொருள் கொள்கலன் கப்பல் ஏப்ரல் 15ஆம் நாள் பயன்பாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக வந்தது.

 உலகின் மிகப்பெரிய 24000 டி.யி.யூ.(TEU) வரை ஏற்றிசெல்லும் திறன் கூடிய இரட்டை எரிப்பொருள் கொள்கலன் கப்பல் ஏப்ரல் 15ஆம் நாள் பயன்பாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக வந்தது. 

இரட்டை எரிப்பொருளில் இயங்கும் சீன கொள்கலன் கப்பல்களின் கட்டுமான வரலாற்றில் இது புதிய சாதனையை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கப்பல், தூரக்கிழக்கு ஐரோப்பா இடையே கடற்வழியில் இயக்கப்படும் என்று சீன சி.எஸ்.எஸ்.சி. குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த கொள்கலன் கப்பல் ஒரு நேரத்தில் 220,000டன் சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்டது. முடியும். சுமார் 24000 கொள்கலன்கள் அடுக்கி வைக்கப்பட்ட உயரம், சாதாரண 25 மாடி உயர கட்டிட்டத்துக்கு சமமாகும். 

மேலும், திரவ இயற்கை எரிவாயுவை இயக்கு ஆற்றலாக கொண்ட இக்கப்பல் தூய்மையாகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.