பொய்யர்களை விட்டு மக்கள் விலகி செல்கின்றனர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
பொய்யர்களை விட்டு
மக்கள்
விலகி செல்கின்றனர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
பொய் கூறி ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கத்தை விட்டு மக்கள் படிப்படியாக விலகி செல்கின்றனர் இந்த தேர்தலிலும்.பொய்யை
ஜெபம் பண்ணுவதை தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை
என எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச உள்ளூராட்சி மன்ற
தேர்தல் கூட்டம் ஒன்றில் கலந்து
கொண்டு உரையாற்றும் போது நேற்று
முல்லேறியாவில் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
பல வாக்குறுதிகளை வழங்கிய
இந்த அரசாங்கத்தை அமைக்க மக்கள் வாக்களித்தனர் புத்தாண்டைக்
கூட மக்களால் திருப்தியாக
கொண்டாட முடியவில்லை மால்மா அரிசி விலையைக் கூட
இவர்களால் குறைக்க முடியவில்லை
இப்போது மீண்டும் பொய்யை
ஜெபம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்
வழங்கிய வாக்குறுதிகளை
நிறைவேற்றாத இவர்கள் மீண்டும் பொய்யையும் புரட்டையும் கூறி கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்
நம்பி வாக்களித்த மக்கள் இப்போது படிப்படியாக விலகிச் செல்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்