செம்பியன் விளையாட்டு கழகத்தினரின் மாபெரும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்றைய தினம் மிகவும் பிரமாண்டமான இடம் பெற்றது
செம்பியன் விளையாட்டு கழகத்தினரின் மாபெரும் பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்றைய தினம் மிகவும் பிரமாண்டமான இடம் பெற்றது
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி போட்டி நேற்றைய தினம் (18) பிற்பகல் 4 மணியளவில் செம்பியன் விளையாட்டு கழகத்தின் பொது மைதானத்தில் இடம் பெற்றது
இப்போட்டியானது உபைத்துள்ளா துஸ்யா பெண்கள் அணித்தலைவர் செம்பியன் விளையாட்டு கழகம் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது இப் சுற்றுப்போட்டி யின் பிரதம விருந்தினராக திரு ஐயாத்துரை ரங்கேஸ்வரன் முன்னாள் வடமராட்சி பிரதேச சபை தவிசாளரும் சிறப்பு விருந்தினராக திரு V.A அநுரசேத பிரிய துசந்த பொலிஸ் பொறுப்பதிகாரி மருதங்கேணி அவர்களும் மற்றும் சுகந்தன் பர்மிகா செம்பியன் பற்று தெற்கு மாதர் சங்க தலைவர் அவர்களும் மற்றும் கௌரவ விருந்தினர் என பலரும் கலந்து கொண்டனர்
இச் சுற்றுப்போட்டியில் வடமராட்சி கிழக்கில் இருந்து பல அணிகள் உடனடியாக பதிவு செய்து போட்டியில் பங்குபெற்றனர் இச் சுற்றுப்போட்டியில் பல போட்டிகளில் இருந்து இறுதி போட்டியில் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினரை எதிர்த்து செம்பியன் Aஅணியினர் மோதினர் மிகவும் விருவிருப்பாக போன இறுதி போட்டியில் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினர் செம்பியனை தமதாக்கி கொண்டனர்
இப் போட்டியினை பார்வையிடுவதற்கு வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இருந்து இளைஞர்கள் பெரியவர்கள் விளையாட்டு கழகத்தினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்