பாலஸ்தீனத்திற்கு பதிலாகவே இஸ்ரேல் என்று தவறுதலாக சொன்னதாக ஆதம்பாவா எம் பி மறுப்பு அறிக்கை...!!
பாலஸ்தீனத்திற்கு பதிலாகவே இஸ்ரேல் என்று தவறுதலாக சொன்னதாக ஆதம்பாவா எம் பி மறுப்பு அறிக்கை...!!
இஸ்ரேலுக்கு ஆதரவாக அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் நாங்கள் தான் என தான் தவறுதலாக குறிப்பிட்டதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ ஆதம்பாவா எம்பி தெரிவித்துள்ளார்
தான் பாலஸ்தீனத்திற்கு பதிலாகவே இஸ்ரேல் என்று தவறுதலாக சொன்னதாகவும், குறித்த விடயத்திற்கு மறுப்புத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
முதுகெலும்பில்லாத சில ஊடகங்கள் தங்களுக்கு சாதகமானவர்களின் தோல்வியை முன்கூட்டியே அறிந்து கொண்டு போலியான பிரச்சாரங்களை பரப்புகின்றனர்.
இவர்கள் NPP கட்சி மீதும் ஆதம்பாவா எம்பி மீதும் சேறு பூச முனைகின்றனர்.
இதுதான் இவர்களின் கேவலமான அரசியல் என குறிப்பிட்டுள்ளார்.