கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025 கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் தேர்தல் சட்டங்களை வலுப்படுத்தல். வேட்பாளர்களது பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் மற்றும் பொலிசாரும் கலந்து கொண்டனர்.