தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற செந்தமிழ் சொல்லருவி லலீசன் சந்நிதியான் ஆச்சிரமதத்தால் கௌரவிப்பு..!
தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற செந்தமிழ் சொல்லருவி லலீசன் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கௌரவிப்பு..!
சிறந்த இலக்கியவாதிக்கான தமிழ் நாடு ஆளுநர் விருது பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அறுபடும், ஆன்மீக சொற்பொழிவாளரும், இலக்கியவாதியுமான செந்தமிழ் சொல்லருவி சந்திர மௌலீசன் லலீசன் அவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிமத்தால் இன்றைய தினம் கௌரவிக்கப்பட்டார்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வு சந்நிதியான் அச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெறும் நிகழ்வில் இடம் பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது. பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் தொடர்ந்து மகாபாரதம் தொடர் சொற்பொழிவினை சொல்லின் செல்வர் இரா செல்வவடிவேல் நிகழ்த்தியதை தொடர்ந்தே தமிழ் நாடு ஆளுநர் விருதுபெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் செந்தமிழ் சொல்லருவி சந்திர மௌலீசன் லலீசன் கௌரவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கெருடாவில் தெற்கு, தொண்டைமானாற்றை சேர்ந்த இளந்துளிர் அமையத்தின் கோரிக்கைக்கு அமைவாக சித்திரை வருட நிகழ்வுக்காக 30,000 ரூபா நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதேவேளை மன்னார் பெரியமடு, காயாநகர் கிராம
த்தில் வாழ்வாதார உதவியாக விவசாய செய்கைக்காக இரு குடும்பங்கள் பயன்படு
த்துவதற்காக 100,000 ரூபா நிதிச் செலவி
ல் ஆழ்துளையிடும் கிணறு அமைக்கப்பட்
டதுடன் , மன்னார் - வட்டக்கண்டல், குருவில் கிராமத்தில் முன்னாள் போராளியான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு மருத்துவ செலவிற்காக ரூபா 25,000 நிதியும், அத்தியவசியமான உலர் உணவுப் பொதியும், வங்காலை, நறுவிலிக்குளம் கிராமத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கும் மருத்துவ செலவிற்காக 25,000 ரூபா நிதியும், அத்தியவசியமான உலர் உணவுப் பொதியும், மடு, பெரியமுறிப்பு கிராமத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கும் மருத்துவ செலவிற்காக 25,000 ரூபா நிதியும், அத்தியவசியமான உலர் உணவுப் பொதியும்,
ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று கடந்த புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
சித்திரை புது வருட பிறப்பினை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய சூழலில் தங்கியுள்ளவர்களுக்கு புத்தாடைகளும் வழங்கிவைக்கப்பட்டன.