Breaking News

ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்..!



ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் 1,037,141 குடும்பங்களுக்கு மொத்தமாக 12.63 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.


அத்துடன், குறித்த குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 580,844 சிரேஷ்ட பிரஜைகளுக்கு, மொத்தமாக 2.9 பில்லியன் ரூபாய் நலன்புரி கொடுப்பனவு வங்கிகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.